சென்னை: சென்னை தலைமைசெயலகத்திற்கு சென்ற ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் முதல் கையெழுத்தாக, கொரோனா நிவாரணமாக, ரூ.4000 ஆயிரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். ஐந்து கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்து முதல் கையெழுத்தாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணமாக, ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். முதல் தவணையாக, இம்மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 2வது கையெழுத்து ; ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ஆக குறைப்பு 3வது கையெழுத்து அரசு உள்ளூர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் பெண்கள் பயணிக்கலாம். 4வது கையெழுத்து மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தல். 5வது கையெழுத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் . இவ்வாறு 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் தன...